×

தேர்தல் தோல்வி எதிரொலி தாய்லாந்து பிரதமர் அரசியலை விட்டு விலகல்

பாங்காங்: தாய்லாந்தில் கடந்த 2014ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பிரதமராக இருந்தவர் பிரயுத் சான் ஓச்சா. இவர் கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் மீண்டும் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டர்ர. ஆனால் இவரது கட்சி வெறும் 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில் அரசியல் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,‘‘ யுனைடட் தாய் நேஷன் கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதின் மூலமாக நான் அரசியலில் இருந்து ஒய்வு பெறுவதை அறிவிக்க விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். தாய்லாந்து நாடாளுமன்றம் நாளை புதிய பிரதமரை தேர்வு செய்ய உள்ள நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் பிரதமர் பிரயுத் அறிவித்துள்ளார்.

The post தேர்தல் தோல்வி எதிரொலி தாய்லாந்து பிரதமர் அரசியலை விட்டு விலகல் appeared first on Dinakaran.

Tags : Thai ,Bangkok ,Prayut Chan Ocha ,Thailand ,Dinakaran ,
× RELATED தாய்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் ராஜினாமா